Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு & காஷ்மீர்: பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடி - மூன்று பேர் கைது!

ஜம்மு & காஷ்மீர்: பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடி - மூன்று பேர் கைது!

ஜம்மு & காஷ்மீர்: பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடி - மூன்று பேர் கைது!

Saffron MomBy : Saffron Mom

  |  28 Dec 2020 9:40 AM GMT

ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானுடன் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளைக் கைது செய்து பூஞ்ச் மாவட்டத்தில் அவர்கள் வைத்திருந்த தீவிரவாத திட்டத்தையும் முறியடித்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ஆறு குண்டுகளையும் மீட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோவிலில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் குண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக பூஞ்ச் மாவட்டத்தின் மூத்த காவலனையர் ரமேஷ் குமார் அங்க்ரல் கூறினார். பூஞ்ச் மாவட்டத்தின் சிறப்புச் செயற்குழு(SOG) சனிக்கிழமை முஸ்தபா இக்பால் கான் மற்றும் முர்தசா இக்பால் ஆகிய இருவரையும் தடுத்து கைது செய்தது.

இவர்களை 49 ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் தலைமையில் நடத்தப்பட்டது, அப்போது இந்த தாக்குதலை நடத்துமாறு பாகிஸ்தானிடம் இருந்து தகவல் கிடைத்ததாகக் கண்டறிந்தனர். "மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், கிராமத்தில் உள்ள கோவிலில் குண்டு வீச ஒப்பிட்டுக்கொண்டுள்ளார் என்பதும் மற்றும் அதற்கான வீடியோவில் அவரது மொபைலில் காணப்பட்டது," என்று SSP கூறினார். தற்போது முஸ்தபா இக்பால் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

இவர்கள் மூவரையும் கைது செய்தது பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று அங்க்ரல் கூறினார். மேலும் அமைதியையும் சீர்குலைக்கும் அவர்களது திட்டமும் முறியடையப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். "இவர்களின் திட்டம் வெற்றியடைந்திருந்தால் நாங்கள் பெருமளவில் விளைவுகளைச் சந்தித்திருப்போம்," என்று அங்க்ரல் கூறினார். இந்த கைதுக்கு டிசம்பர் 13 இல் நடந்த தாக்குதலுக்கும் தொடர்பிருக்கின்றது என்று அவர் கூறினார். மேலும் பயன்படுத்திய பாதை மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.

"பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய உளவுத்துறையின் கீழ் உள்ள தகவலாகும். தற்போது கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் ஜம்மு & காஷ்மீரின் காஸ்னவி குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்," என்று கூறி தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து கண்டிருக்கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

இந்த தேடுதல் நடவடிக்கை போது தெஹ்ரீக்-உல்-முஜாஹிதீன் அமைப்பின் சுவரொட்டிகள் போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர் மற்றும் அது பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலுக்கு அச்சுறுத்தல்கள் என்றும் கூறினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News