Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு & காஷ்மீர்: JeM தீவிரவாதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு & காஷ்மீர்: JeM தீவிரவாதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு & காஷ்மீர்: JeM தீவிரவாதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
X

Saffron MomBy : Saffron Mom

  |  25 Dec 2020 7:17 PM IST

வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் பரமுல்லா மாவட்டத்தில் வானிகம் பயீன் கிரீரி பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான JeM யை சேர்ந்த ஒரு தீவிரவாதி உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

"பரமுல்லாவில் வானிகம் பயீன் கிரீரி தீவிரவாதிகள் இருப்பது குறித்து தகவல் கிடைத்து, அதனைத் தொடர்ந்து பரமுல்லா காவல்துறை மற்றும் 29RR, 176Bn CRPF இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது தீவிரவாதிகள் மெஹ்ராஜ் உத்தின் வானி குடியிருப்பில் பகுதி இருந்தது கண்டறியப்பட்டது, அவர்கள் சரணடைவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. அவர்கள் கண்மூடித் தனமாக நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டது," என்று காவல்துறை வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை உறுதி செய்து, இருவரது உடலும் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்த அப்ரார் அலியாஸ் லாஃஹு என்று கண்டறியப்பட்டது மற்றும் மற்றொருவர் JeM யை சேர்ந்த அமீர் சிராஜ் என்று கண்டறியப்பட்டுள்ளது," என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையின் அறிக்கையின் படி, கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்களைத் தாக்கியது போன்ற பல குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது வருகின்றது.

மேலும் தாக்குதல் நடந்த இடத்தை முழுமையாக அப்புறப்படுத்தி மற்றும் பொருட்களைக் கைப்பற்றும் வரை அப்பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையுடன் இணைந்து ஒத்துழைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News