பெங்களூருவில் பரபரப்பு: ஆட்டோ டிரைவராக மக்களோடு சுற்றிய ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது!
By : Thangavelu
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆட்டோ டிரைவராக ஊடுவியிருந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த ஹூசைன் என்ற பயங்கரவாதியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் பெங்களூருவுக்கு வந்திருந்தனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஹுசைன் பெங்களூருவில் மக்களோடு, மக்களாக பதுங்கி வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்துவதற்கு பெங்களூரு போலீசாரின் உதவியை நாடினர்.
இதனை தொடர்ந்து ஹூசைனை பெங்களூரு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. அப்போது ஆட்டோ டிரைவராக பயங்கரவாதி ஹூசைன் இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்து அதிடிராக கைது செய்தனர்.
அதன்படி பெங்களூரு, ஸ்ரீராமபுரா பகுதியில் மனைவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹூசைன் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது. இவரை ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தடுப்பு பிரிவு ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில் பெங்களூருவில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளது. இவர் பெங்களூருவில் யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பலர் இதில் தொடர்புடையதாக கருதப்பட்டால் அவர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களோடு, மக்களாக கலந்து பயங்கரவாதி சுற்றிவந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: One India Tamil