மனசாட்சியுடன் பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும்: ஓம்பிர்லா!
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும். அச்சு ஊடகங்களை போன்று சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
By : Thangavelu
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும். அச்சு ஊடகங்களை போன்று சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதாவது: மனசாட்சியின் காவலர்களாக பத்திரிகையாளர்கள் திகழ வேண்டும். சமூக அக்கறையுள்ள பார்வை இருக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் பயமின்றி பாரபட்சம் இல்லாமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.
மேலும், ஊடகங்கள் நாட்டுக்காக திறம்பட சேவை செய்ய வேண்டும். அச்சு ஊடகங்களைப் போன்று சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் அதிகமாக பரவுகிறது. இதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: