2024 ஆம் ஆண்டு வரை பாஜக தலைவராக ஜே.பி.நட்டா நீடிப்பார் - மாஸ்டர் பிளானில் பா.ஜ.க
2024 ஆம் ஆண்டு வரை குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பாரதிய ஜனதா தலைவராக ஜே.பி.நட்டா நீடிப்பார்.
By : Bharathi Latha
பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மூன்று ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இருப்பினும் அவருக்கு தற்போது பதவி நீடிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு சில முக்கியமான மாநிலங்களில் சட்டசபை சேர்த்தல்கள் நடக்க உள்ளன. கட்சியில் அதே நிர்வாகம் மேற்கண்ட தேர்தலுக்கு உதவும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது.
எனவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை நட்டா பதவி நீடிப்பு அளிக்கக்கூடும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தனர். பாரதிய ஜனதாவின் உயரிய அமைப்பான ஆட்சி மன்ற குழு இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது. பொதுவாக தேசிய தலைவர் நடப்பதற்கு முன்பு பாதி மாநில அளவிலாவது மாநில பா.ஜ.கவின் உள்கட்சி தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது வரை மாநில பா.ஜ.கவின் உள்கட்சி தேர்தல் தொடங்கப்படவில்லை ஜே.பி.நட்டா நீடிப்பார் என்பதற்கான அறிவுரை அறிகுறியாக இது சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஜே.பி நட்டாக்கும் முன்பு தலைவராக இருந்த அமித்ஷா 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பதவி நீடிப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு தான் உல் கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நட்டா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Input & Image courtesy: Maalaimalar