கல்வான் தாக்குதல் ஓராண்டு நிறைவு.. நினைவு பாடல் வெளியிட்ட பாடகர் ஹரிஹரன்.!
இந்தப் பாடலை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தப் பாடலின் காட்சிகள் கல்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், அவர்களின் தேச ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

By : Thangavelu
லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜூனன் 15 இந்தியா, சீனா இடையே வன்முறை மோதலால் ஏற்பட்ட தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் தங்களது கண்டனங்களை பதிவிட்டது. இதனிடையே தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரபல பாடகர் ஹரிஹரன் 'கால்வன் கே வீர்' என்ற பாடலைப் பாடியுள்ளார்.
இந்தப் பாடலை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தப் பாடலின் காட்சிகள் கால்வன் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், அவர்களின் தேச ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
இந்தப் பாடல் வீடியோ காட்சியில், இந்திய ராணுவத்தினரின் பயிற்சிகள் மற்றும் அங்கு அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள் மற்றும் எதிர்கொள்கின்ற அச்சுறுத்தல் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வீரர்களை நினைவுகூறும் விதமாக இப்பாடலை பாடியுள்ளார் ஹரிஹரன் என்பது குறிப்பிடத்தக்கது.
