Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் மோசமான மொழி கன்னடம்: மன்னிப்பு கேட்ட கூகுள் நிறுவனம்.!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலரும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனங்களை தெரிவித்தனர். மாநிலத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

இந்தியாவில் மோசமான மொழி கன்னடம்: மன்னிப்பு கேட்ட கூகுள் நிறுவனம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Jun 2021 3:12 AM GMT

இந்தியாவில் மிகவும் மோசமான மொழி கன்னடம் என்று கூகுள் தேடுதல் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்த கன்னட மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் ஆத்திமடைந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலரும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனங்களை தெரிவித்தனர். மாநிலத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடக பண்பாடு மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கன்னட மொழி 2500 ஆண்டுகள் பழமையான மொழி. இது கர்நாடக மக்களுக்கு பெருமையான விஷயம் ஆகும். கன்னட மொழியை சிறுமை படுத்திய கூகுள் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

மேலும், கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது. கன்னட மொழி மோசமான மொழி இல்லை. கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News