18 வயதை கடந்தவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு.!
நாளை இரவு முதல் மே 10ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

கர்நாடகாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. அதே போன்று கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது நாளை இரவு முதல் மே 10ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.