கர்நாடகாவில் மீண்டும் ஊடரங்கு இல்லை.. முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டம்.!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் ஆக்கிரமித்தது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் தோன்றிய கொரோனா தொற்றின் தாக்கம் தற்போதுதான் குறைய தொடங்கியுள்ளது. ஆனால் சில மாநிலங்களில் கொரோனா வீரியம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் கர்நாடக மாநிலமும் அடங்கும்.

By : Thangavelu

இந்நிலையில், கொரோனா தடுப்பு ஆலோசனை குழு மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் தற்போது உருவாகியுள்ள கொரோனா பாதிப்பு பார்க்கும்போது, இது 2வது அலையின் ஒரு முன்னோட்டம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்று அதிகரித்தால், இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது.
ஆனால் பொதுமக்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.