மேகதாது அணை விவகாரம்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம்.!
மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

By : Thangavelu
மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக அரசு, ஒகேனக்கல் அருகே உள்ள மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான நீர் ஆதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டி முடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. இதற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அரசால் அணையை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
