Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகாவில் பரபரப்பு: ஸ்டாலினை போன்று சட்டசபையில் சட்டையை கழற்றிய காங்., எம்.எல்.ஏ., அதிரடி சஸ்பெண்ட்.!

கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர் தனது சட்டையை கழற்றிக்கொண்டு அநாகரிகமாக செயல்பட்ட காரணத்தினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் பரபரப்பு: ஸ்டாலினை போன்று சட்டசபையில் சட்டையை கழற்றிய காங்., எம்.எல்.ஏ., அதிரடி சஸ்பெண்ட்.!

ThangaveluBy : Thangavelu

  |  5 March 2021 7:34 AM GMT

கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர் தனது சட்டையை கழற்றிக்கொண்டு அநாகரிகமாக செயல்பட்ட காரணத்தினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் சபாநாயகர் காகேரி, ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.





அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையாக உள்ளது என்று கூச்சல் போட்டனர். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் சங்கமேஸ்வர் சட்டையை கழற்றிக்கொண்டு முதலமைச்சர் எடியூரப்பா முன்பாக கோஷம் போட்டார். இதனையடுத்து சபாநாயகர் கூறியும் அவர் சட்டையை அணிந்து கொள்ளவில்லை.

இதன் பின்னர் மாநில காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.கே.சிவக்குமார் சட்டையை அணியச் செய்தார். இந்த சம்பவம் சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து உறுப்பினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் சங்கமேஷ்வர் இப்படி நடந்து கொண்டவிதம் சரியில்லை. எனவே மார்ச் 12ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் கர்நாடக முழுவதும் வைரலாகி வருகிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றபோது, திமுக தலைவர் ஸ்டாலின் தனது சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் காட்சி அளித்தார். இது நாடகம் என்று பலரும் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News