Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகா: கொரோனா உயிரிழப்பும், பாதிப்பும் வேகமாக குறைந்து வருகிறது.!

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. புதிதாக 9,808 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா: கொரோனா உயிரிழப்பும், பாதிப்பும் வேகமாக குறைந்து வருகிறது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 Jun 2021 11:25 AM IST

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. புதிதாக 9,808 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் நேற்று (ஜூன் 8) ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 224 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் 9,808 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது.





கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு 32 ஆயிரத்து 99 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 23,449 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து 24 லட்சத்து 60 ஆயிரத்து 165 பேர் குணமடைந்துள்ளனர். தலைநகர் பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,028 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் சக அமைச்சர்கள் மருத்துவர்கள் உட்பட அனைவரின் தீவிர முயற்சியால்தான் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது என அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News