Kathir News
Begin typing your search above and press return to search.

தென் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டிய கர்நாடக அரசு: தமிழகத்தில் 5 மாவட்டங்கள் வறட்சிக்கு செல்லும்.!

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசு புதிய அணை ஒன்றை கட்டி முடித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த புதிய அணையால் 5 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் அமைந்துள்ளது.

தென் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டிய கர்நாடக அரசு: தமிழகத்தில் 5 மாவட்டங்கள் வறட்சிக்கு செல்லும்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 July 2021 5:17 PM IST

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசு புதிய அணை ஒன்றை கட்டி முடித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த புதிய அணையால் 5 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும், பெண்ணையாறு, ஆந்திரா மற்றும் தமிழகம், புதுச்சேரி வழியாக பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது. தமிழகத்தில் இது தென் பெண்ணையாறு என்று அழைக்கப்படுகிறது. இதன் வாயிலாக கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயன்பெறுகிறது.

ஆற்றின் மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள் கீழ் பகுதியில் உள்ள மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் நீரை சேமிக்கின்ற வகையில் கட்டமைப்புகளை அமைக்கக்கூடாது என்று மெட்ராஸ், மைசூரு அரசுகள் இடையே கடந்த 1892ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனை மீறி தற்போது கர்நாடக அரசு பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சியார் குப்பத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள கர்நாடக வனப்பகுதியில் உள்ள யார்கோள் என்ற இடத்தில் 10 மாதங்களில் அணையை கட்டி முடித்துள்ளது. இது 430 மீட்டர் நீளம் 50 மீட்டர் உயரம் என தெரியவந்துள்ளது. தறபோது அணையை சத்தமின்றி கர்நாடக அரசு கட்டி முடித்துள்ளது.

இந்த அணையால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து முற்றிலும் தடைப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட அணையில் மதகுகள் இன்றி கட்டப்பட்டுள்ளது. முழுமையாக அணை நிரம்பினால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வரும்.

இந்த சம்பவத்தால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைப்பட்டு 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News