தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்பவர்களுக்கு கொரோனா சான்று தேவையில்லை: கர்நாடகா அரசு.!
பெங்களூருவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

By : Thangavelu
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அண்டை மாநிலமான கர்நாடக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
இதனிடையே கடந்த வாரம் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு நகருக்கு வருபவர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்குள் செல்வதற்கு சிக்கல் நீடித்தது. இதனையடுத்து கர்நாடக அரசு ஒரு விளக்கம் ஒன்றை அளித்தது. தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா சான்று தேவையில்லை என கூறியிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பெங்களூருவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், நகரில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.
