Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்.. கர்நாடகாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு.!

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று கை மீறி சென்று விட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்.. கர்நாடகாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 April 2021 11:31 AM IST

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், இன்று 24ம் தேதி முதல் 25ம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக தீவிரம் அடைந்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதில் மகாராஷ்டிரா, டெல்லி, மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.





அதே போன்று கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று கை மீறி சென்று விட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகவே தெரிவித்தார்.




இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News