Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஆக்சிஜன் பேருந்து: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தொடங்கினார்.!

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஆக்சிஜன் பேருந்து: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தொடங்கினார்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 May 2021 6:56 PM IST

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். வருகின்ற மே 24ம் தேதி வரை இந்த ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் நோய் பரவல் விரைவில் கட்டுக்குள் வருவதற்கு மாநில சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.




இதனிடையே கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொற்றால் பாதித்தவர்களுக்கு உதவும் வகையில், ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிமுகம் செய்து வைத்தார். மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் பேருந்து விரைவுப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

தொற்றால் பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி அவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் இந்த பேருந்து உதவிகரமாக அமையும் என பொதுமக்கள் அரசை பாராட்டி வருகின்றனர். இது போன்று மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் கொரோனா நோயாளிகளுக்கு சற்று ஆறுதலை தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News