Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து பெண்ணை காதலிக்க பெயரை மாற்றிகொண்டு மோசடியில் ஈடுபட்ட கரீம் : குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட லவ் ஜிகாத்..!

Kareem poses as Karan to lure Hindu woman, booked for rape after sexually assaulting her for 11 days

இந்து பெண்ணை காதலிக்க பெயரை மாற்றிகொண்டு மோசடியில் ஈடுபட்ட கரீம் : குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட லவ் ஜிகாத்..!
X

MuruganandhamBy : Muruganandham

  |  5 Oct 2021 8:32 AM IST

மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் ஜிஹாத் வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு இந்து பெண்ணை ஏமாற்றி கவர்ந்திழுக்க கரண் என்று தன் பெயரை மாற்றிகொண்டு மோசடியில் ஈடுபட்ட கரீம் (32) மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.

கரீம் தன்னை கரண் ஜாதவ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது, பன்செமல் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டம் பெற்ற 22 வயது பெண்ணிடம், அவர் கடந்த இரண்டு மாதங்களாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

செப்டம்பர் 20 அன்று, கரீம் அந்தப் பெண்ணை ஏமாற்றி இந்தூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு 11 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கரீமின் அடையாளம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தபோது, அந்தப் பெண்ணை தனியாக விட்டுவிட்டு தப்பிஓடினார்.

பாதிக்கப்பட்ட பெண் இந்தரிலிருந்து திரும்பி கரீம் பற்றி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். தன்னை இந்தூர் அழைத்துச் செல்ல தன்னிடம் பொய் கூறியதாக தெரிவித்தார். கரீம் தன்னை இந்து என்று வெளிப்படுத்திக்கொண்டு, முஸ்லீம் அடையாளத்தை மறைத்ததாக அந்த பெண் கூறினார்.

சிறுமி தனது குடும்பத்தினருடன் உடனடியாக பன்செமல் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்தார். ஆள்மாறாட்டம் மற்றும் மதமாற்ற எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்காக கற்பழிப்பு, எஸ்சி/ எஸ்டி சட்டம் ஆகியவற்றிற்காக ஐபிசி பிரிவு 376 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி பி.எஸ்.பாகேல் படி, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரீம் வெல்டராக வேலை செய்தார் என்றும் தெரிவித்தார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News