குண்டு வெடித்த பதற்றத்தில் கர்நாடகம் - இது தீவிரவாத தாக்குதல் தான் என பளிச்சென அடித்த கர்நாடக டி.ஜி.பி
'மங்களூவில் நடைபெற்றது வெடி விபத்து அல்ல அது தீவிரவாத தாக்குதல்' என கர்நாடக டி.ஜி.பி விளக்கம் அளித்துள்ளார்.
By : Mohan Raj
'மங்களூவில் நடைபெற்றது வெடி விபத்து அல்ல அது தீவிரவாத தாக்குதல்' என கர்நாடக டி.ஜி.பி விளக்கம் அளித்துள்ளார்.
இன்று அதிகாலை மங்களூருவில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது இதில் ஆட்டோவில் பயணித்த ஓட்டுனர் மற்றும் பயணி இருவரும் காயமடைந்தனர். இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமையுடன் கர்நாடக போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்பொழுது தடையவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் ஆட்டோவில் எரிந்த நிலையில் குக்கரும், பாட்டரிகளும் கைப்பற்றப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை பயங்கரவாத தாக்குதலோ என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக கர்நாடக மாநில டி.ஜி.பி தீவிரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 'கர்நாடக மாநில மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம போல் வெடித்தது வெடி விபத்து அல்ல பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் நடத்தியதற்கான அடையாளம் போல் தெரிகிறது. மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன், கர்நாடகா காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது' என தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் பதற்றத்தை உருவாக்கிய நிலையில் தற்போது மங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.