Kathir News
Begin typing your search above and press return to search.

அதிர்ச்சி! பட்டப்பகலில் பெண்மணியைச் சரமாரியாகத் தாக்கிய இளைஞன் இஸ்மாயில்.!

அதிர்ச்சி! பட்டப்பகலில் பெண்மணியைச் சரமாரியாகத் தாக்கிய இளைஞன் இஸ்மாயில்.!

அதிர்ச்சி! பட்டப்பகலில் பெண்மணியைச் சரமாரியாகத் தாக்கிய இளைஞன் இஸ்மாயில்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  23 Dec 2020 12:00 PM IST

திங்களன்று பட்டப்பகலில் கர்நாடகாவில் ஹுப்பள்ளி மாவட்டத்தில் தேஷ்பாண்டே நகரில் 21 வயது ஆஷா என்ற பெண்மணி சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். முன்னரும் இதே போன்ற ஒரு சம்பவத்தில் நிகிதா தோமர் என்ற பெண் சாலையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு பல குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. நேற்று நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி இஸ்மாயில் என்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கையின் படி, கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். பின்னர் ஆஷா அவருடன் இருந்த தொடர்பை விடுத்து வேறொரு நபருடன் பழகி வந்துள்ளார். மேலும் ஐந்து மாதங்களாக இஸ்மாயில் அழைப்பையும் இவர் எடுக்கவில்லை. இதில் கோபமடைந்த இவர் ஆஷாவை பழிவாங்க எண்ணித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பாதிக்கப்பட்டவரைத் துணியால் பின்னால் இருந்து சாலையில் தாக்குதல் நடத்தி கத்தியால் தாக்கியுள்ளார். மேலும் வழியில் சென்றுகொண்டிருந்த நபர் இவர் கையில் ஆயுதங்கள் வைத்திருப்பதைத் தெரிந்தும் அவரை தடுக்க முயற்சி செய்துள்ளார்.

இந்த சம்பவமானது பாதிக்கப்பட்ட பெண் தினமும் வேலைக்குச் செல்லும் வழியில் நடந்துள்ளது. இஸ்மாயில் அவரை வழியில் தடுத்து பின்னாடி இருந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் இஸ்மாயிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி தார்வாட் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.

மேலும் குற்றவாளி கைது செய்யப்பட்டு மற்றும் அவர் தாக்கிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹுப்பாளி காவல் ஆணையர் லாபு ராம் கூறினார். "விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நினைவு திரும்பியதும் வாக்குமூலம் பெறப்படும்," என்பதையும் குறிப்பிட்டார். இது குறித்து விசாரணை நடத்திவரும் அதிகாரி இந்த சம்பவமானது அந்த பெண் வேறொரு நபருடன் உறவு வைத்துக் கொண்டதால் ஏற்பட்ட கோபத்தால் நடந்துள்ளது, இது குறித்து முழு விசாரணையும் நடந்து வருகிறது என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News