ஊரடங்கு நீட்டிப்பு.. கருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை.. எடியூரப்பா அதிரடி!
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை தொடர்ந்து அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை தொடர்ந்து அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக முதலமைச்சர் எடியூரப்பா அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மே 24ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. இருந்தாலும் ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை இந்த கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை அச்சுறுத்தி வருகிறது. அரசு மாவட்ட மருத்துவமனைகளில் மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது என கூறியுள்ளார்.