Kathir News
Begin typing your search above and press return to search.

வானுயர்ந்த முருடேஸ்வர் சிவன் சிலையை உடைக்க பயங்கரவாத அமைப்பு சதியா ? கர்நாடகம் முழுவதும் ஒரே பரபரப்பு !

வானுயர்ந்த முருடேஸ்வர் சிவன் சிலையை உடைக்க பயங்கரவாத அமைப்பு சதியா  ? கர்நாடகம்  முழுவதும் ஒரே பரபரப்பு !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2021 8:04 AM GMT

கர்நாடகாவிலுள்ள புகழ் பெற்ற முருடேஸ்வர் சிவன் கோவில் சிலையை உடைக்க, இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்ஐ.எஸ் சதி திட்டம் தீட்டியுள்ளதாக வெளியான தகவல், நாடுமுழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தென்னிந்தியாவில் புகழ்பெற்ற சக்திவாய்ந்த சிவன் கோயில்களில், கர்நாடகாவிலுள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் இருக்கும் முருடேஸ்வராவில் சிவன் கோயிலுக்கு முக்கிய இடம் உண்டு. இக்கோயிலில் 123 அடி உயர சிவன் சிலை உள்ளது. அழகும், பிரம்மாண்டமும் ஒரு சேர அமைந்த இச்சிலை, உலகம் முழுவதிலும் இருக்கும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகிலேயே 2-வது உயர சிவன் சிலை என்ற பெருமையும் இச்ச்சிலைக்கு உண்டு.

இந்நிலையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'தி வாய்ஸ் ஆப் கின்ட்டில்" இணையத்தளத்தில். முருடேஸ்வர் சிவன் கோவிலின் சிலையை சித்தரித்து கிராபிக்ஸ் வடிவில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது, அதில் சிவன் தலையை எடுத்துவிட்டு ஒரு கொடி பறப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்புகைப்படத்தின் கீழ் "பொய் கடவுள்களை உடைக்கும் நேரம்" என்றும் எழுதப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியான தகவலை, அன்குல் சக்சேனா என்பவர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து, மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

அப்படத்தை , பட்கல் தொகுதி பா.ஜ. க எம்.எல்.ஏ. சுனில் நாயக்கும் பகிர்ந்து, மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பினர், சைபர் கிரைம் காவல்துறையிடம் , ISIS_magazine இணையவழி நிறுவனத்தை தடை செய்யகோரி புகாரும் அளித்துள்ளனர்.

தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா என தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ச்சியாக சாமி சிலைகள் உடைக்கபட்டுவரும் நிலையில், இப்பொழுது இச் சர்ச்சை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image : TOI, KSTDC

Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News