Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக: ஜனவரி 18 இல் இருந்து அமலுக்கு வரவிற்கும் பசுவதை தடுப்பு சட்டம்!

கர்நாடக: ஜனவரி 18 இல் இருந்து அமலுக்கு வரவிற்கும் பசுவதை தடுப்பு சட்டம்!

கர்நாடக: ஜனவரி 18 இல் இருந்து அமலுக்கு வரவிற்கும் பசுவதை தடுப்பு சட்டம்!

Saffron MomBy : Saffron Mom

  |  18 Jan 2021 6:45 AM GMT

தொடர்ந்து வட இந்தியாவில் ஒரு பெரிய குற்றமாக இருந்து வரும் பசுக்களைப் படுகொலை செய்வதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, கர்நாடகாவில் ஜனவரி 18 இல் இருந்து மாடுகள் படுகொலை செய்வதற்கு எதிரான சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின் கீழ் மாடுகளைப் படுகொலை செய்பவர்களுக்கு 3-7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடரும் குற்றங்களுக்கு 10 லட்சம் வரை அபராதமும் மற்றும் 7 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்படும். "ஜனவரி 18 முதல் கர்நாடகாவில் மாடுகள் படுகொலை செய்யப்படுவதற்கு மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான 2020 சட்டம் அமலுக்கு வருகின்றது," என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்த மசோதா குறித்துப் பேசிய கர்நாடக அமைச்சர் JC மதுஸ்வாமி, 13 வயதுக்கு மேலான எருமைகள் தவிர மற்ற மாடுகள் மற்றும் கன்றுகளைப் படுகொலை செய்வதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. மேலும் சட்டவிரோதமாகப் பசுக்களைக் கொலை செய்து விற்பனை செய்வது அல்லது ஏற்றிச் செல்வது தண்டனை கூறியது ஆகும் என்றும் கூறினார். "மாட்டுக்கு நோய் ஏற்பட்டிருந்தது அது மற்ற கால்நடைகளுக்குப் பரவும் என்பதால் அதனை வதை செய்யலாம்," என்றும் தெரிவித்தார்.

டிசம்பர் 9 2020 இல் மாநிலச் சட்டசபையில் மாடுகள் படுகொலை செய்வதற்கு எதிரான சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்தது இந்த சட்டம் அமலுக்கு வருகின்றது. அந்த அறிக்கையில், மாடுகள் படுகொலை செய்வதைத் தவிர்ப்பதற்கும் மற்றும் அதனைப் பாதுகாப்பதற்கான விரிவாகத் தெரிவிப்பதே இந்த சட்டம் என்று மாநில அரசு தெரிவித்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News