Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர்: பயங்கரவாதியைக் கொண்டு சென்றதற்காகக் காங்கிரஸ் உறுப்பினர் கைது.!

காஷ்மீர்: பயங்கரவாதியைக் கொண்டு சென்றதற்காகக் காங்கிரஸ் உறுப்பினர் கைது.!

காஷ்மீர்: பயங்கரவாதியைக் கொண்டு சென்றதற்காகக் காங்கிரஸ் உறுப்பினர் கைது.!

Saffron MomBy : Saffron Mom

  |  11 Dec 2020 11:55 AM GMT

வியாழக்கிழமை காஷ்மீர் ஷோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகளை ஏற்றிச்சென்ற காங்கிரஸ் தலைவரை ஜம்மு&காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது. அறிக்கையின் படி, இமாம்சாஹாப் ஷோபியனைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் கௌஹர் அஹமத் வாணியைத் தீவிரவாதியை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்றதற்காக டிசம்பர் 7 இல் குற்றம்சாட்டப்பட்டார். தற்போது காங்கிரஸ் உறுப்பினரும் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கைக்குப் பின்னர் ஊடகத்துக்குப் பேட்டியளித்த மூத்த காவலதிகாரி, இமாம்சாஹாப் ஷோபியன் காவல் நிலையத்தில் UAPA கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் மற்றும் அவருக்கு 7 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் காரில் பயணிப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனை அடுத்து டிசம்பர் 7இல் ட்ரெண்ஸ் பகுதியில் பாபா காதர் ராம்புரா சவுக் பகுதியில் இந்திய இராணுவம் அந்த காரை தடுத்து நிறுத்தியது. இருப்பினும் பயங்கரவாதி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் பர்காச்சூ பகுதியில் காரை விட்டுவிட்டுத் தப்பிவிட்டனர். இமாம் சாஹிப் பகுதியில் உள்ளது அவரது வீட்டிற்குப் புதன்கிழமை வாணி வந்ததாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

விசாரணைக்காக அவர் கொண்டுசெல்லப்பட்டார். "அவர் முதலில் பாதிக்கப்பட்டவராக நாடகமாடினர், பின்னர் விசாரணைக்குப் பிறகு முறையாகக் கைது செய்யப்பட்டார்," என்று மூத்த காவலதிகாரி தெரிவித்தார். இதற்கிடையில், ஜம்மு & காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் GA மீர் வாணி காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News