ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு வீர தீர செயல் விருது ! அதிகமான வீரர்கள் இம்முறை தேர்வு !
ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு வீர தீர செயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டால் வீரர்களுக்கு குறிப்பாக ராணுவ வீரர்களுக்கும், எல்லைப்பகுதியில் அன்னியப் படைகளை எதிர்த்துப் போராடிய வீரர்களுக்கும் வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட்டு வருகின்றது. துணிச்சலான வீரமிக்க செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விருதை வழங்குவதில் இந்திய மிகவும் பெருமை கொள்கிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான வீரதீர செயலுக்கான அதிகமான ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் 1,380 போலீஸ் வீரர்கள் வீர, தீர செயலுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் 1,380 போலீஸ் அதிகாரிகளும் வீர, தீர செயலுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 23 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட 20 பேர் இதில் அடங்குவர். இதுகுறித்து விவேக் பாண்டே அவர்கள் கூறுகையில், "கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லையை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட 20 பேர்உட்பட 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். முதல்முறையாக அதிகம் பேருக்கு விருது கிடைத்துள்ளது" என்றும் அவர் கூறினார்.
Image courtesy:India Today