கொடூரம்! தனது சொந்த மகனையே பலியாகக் கொடுத்த மதர்ஸா பள்ளி ஆசிரியை!
கொடூரம்! தனது சொந்த மகனையே பலியாகக் கொடுத்த மதர்ஸா பள்ளி ஆசிரியை!
![கொடூரம்! தனது சொந்த மகனையே பலியாகக் கொடுத்த மதர்ஸா பள்ளி ஆசிரியை! கொடூரம்! தனது சொந்த மகனையே பலியாகக் கொடுத்த மதர்ஸா பள்ளி ஆசிரியை!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/d186b509fd509ae86bf50488e04f351d.jpg)
ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, கேரளாவில் பாலக்காடு பகுதியில் காவல்துறை 30 வயதுடைய பெண்மணியைத் தனது சொந்த 6 வயது மகனை "அல்லாவிற்கு அர்ப்பணிப்பு" என்று கூறி கொன்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர் ஆமில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றவாளி ஷாஹிதா உள்ளூர் மதர்ஸாவில் ஆசிரியராக உள்ளார். இவர் பாலக்காடு அவசர உதவி அறைக்குக் காலை 3 மணியளவில் அழைத்து தனது மகனின் தொண்டையை வெட்டி கொலை செய்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறை விரைந்து இறந்த சிறுவனின் உடலை மீட்டது.
குற்றவாளி சிறுவனின் காலை கட்டிவைத்து குளியல் அறையில் வைத்து கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அல்லாவிற்கு அர்ப்பணிக்க தன் மகனைக் கொன்றதாகவும் குற்றவாளி காவல்துறையிடம் தெரிவித்தார். இந்த சம்பவமானது, குற்றவாளியின் கணவர் சுலைமான் மற்றும் அவர்களது மற்ற இரண்டு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நடந்துள்ளது. குற்றவாளி மேல் இந்தியத் தண்டனை சட்டம் கொலைக் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவருடன் முழுமையான விசாரணைக்குப் பிறகு தான் கொலை சம்பவத்திற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்க முடியும் என்று SP விஸ்வநாத் தெரிவித்துள்ளார். ஷாஹிதா கர்ப்பமாக இருப்பதும் குறிப்பிட்ட தக்கது. மேலும் இந்த சம்பவமானது முன்பே திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டு நபர்களின் கருத்துக்களின் படி, இவர்களின் குடும்பம் மூட நம்பிக்கை அற்றது என்று தெரிவித்துள்ளனர்.
இதே போன்று மூடநம்பிக்கை தொடர்பான சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்று நடந்துள்ளது. கல்லூரி படிக்கும் தனது இரண்டு மகள்களைத் தெய்விக செய்தி கிடைத்ததாகக் கூறி கொலை செய்துள்ளனர்.