கன்னட பெயர்களை மலையாளத்தில் மாற்றிய கேரளா.. கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு.!
கேரள அரசின் இந்த செயலுக்கு கர்நாடக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். உடனடியாக பெயர் மாற்றியதை திரும்பபெற வேண்டும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டம், கர்நாடக எல்லையோரத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகளவு கன்னட பேசும் மக்களே வசித்து வருகின்றனர். இதன் காரணமாக காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் பெயர்கள் கன்னட மொழியில் இருந்து வந்தது.
இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகம் கன்னட மொழி பெயர்களை நீக்கிவிட்டு மலையாளத்தில் பெயர் மற்றம் செய்துள்ளது. மல்லா என்ற பெயரை மல்லம் என்றும், மதுரு என்ற பெயரை மதுரம் எனவும் பெயரை மாற்றியுள்ளது.
கேரள அரசின் இந்த செயலுக்கு கர்நாடக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். உடனடியாக பெயர் மாற்றியதை திரும்பபெற வேண்டும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் கம்யூனிஸ்ட் அரசின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.