Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: சைக்கிள் திருடிய சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீசார்.!

சைக்கிள் ஓட்டுகின்ற ஆசையால் பக்கத்து வீட்டில் இருந்து சைக்கிளை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து போலீசார் சைக்கிளை கைப்பற்றி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

கேரளா: சைக்கிள் திருடிய சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீசார்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 April 2021 6:27 PM IST

கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடியில் ஒரு சைக்கிள் ஒன்று திருடு போனதாக வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் வினோத் கிருஷ்ணன் இது தொடர்பாக விசாரணை நடத்தி, திருடனைக் கண்டுபிடித்தார். ஆனால் சைக்கிளை திருடியது 8 வயது சிறுவன் என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த சிறுவன் அட்டப்பாடி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். சைக்கிள் ஓட்டுகின்ற ஆசையால் பக்கத்து வீட்டில் இருந்து சைக்கிளை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து போலீசார் சைக்கிளை கைப்பற்றி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறுவன் வீட்டுக்கு சென்ற போலீசார் சைக்கிள் ஒன்றை பரிசு அளித்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட சிறுவன் 'இனிமேல் திருடமாட்டேன்' என உறுதியளித்துள்ளான். போலீசாரின் செயலை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News