கேரளா: 'எச்சில் இல்லாத உணவு'- அல்லாத உணவகங்களை பரிந்துரைக்கும் கிறிஸ்தவ குழுக்கள் !
By : Saffron Mom
இந்த மாத ஆரம்பத்தில் ஒரு முஸ்லிம் நபர் உணவு தயாரிக்கும் தட்டில் எச்சில் துப்பியதாக கூறப்படும் ஒரு வீடியோ வைரல் ஆனது. இது உணவு தயாரிக்கும் போது சில முஸ்லிம் சமய மக்களால் பின்பற்றப்படும் சுகாதாரமற்ற நடைமுறைகளை பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியது. இதற்கு பிறகு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ குழுக்கள் முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் ஹோட்டல்களை அடையாளம் காண ஒரு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தங்கள் ஆதரவாளர்களை முஸ்லிமல்லாதவர்கள் ஹோட்டல்களுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியுள்ளது. கிறிஸ்தவ குழுக்களான 'சோல்ஜர் ஆப் க்ராஸ்' போன்ற சில அமைப்புகள் கேரளாவில் எச்சில் இல்லாத உணவுகள் பரிமாறப்படும் கூறி சில ஓட்டல்களில் பட்டியலை பகிர்ந்தது. இந்த பட்டியலில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் ஹோட்டல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இது சம்பந்தமாக வெளியிட்ட நியூஸ் மினிட் செய்திகள், இந்து மற்றும் கிறிஸ்தவ குழுக்கள் இருவருமே முஸ்லிம்களுக்கு எதிராக இந்த பிரச்சாரத்தை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்துக்கள் அவர்கள் இதில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து அந்த அளவுக்கு ஆதாரங்கள் இல்லை. இதுபோன்ற பட்டியல்கள் முகநூல், வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹலால் குறியீடு பலகைகள் உள்ள உணவகங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில் முஸ்லிம் சமையல்காரர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த குற்றச்சாட்டுகள் புதியதல்ல.
இது தொடர்பாக பல வீடியோக்கள் நாட்டின் பல பகுதிகளில் வெளியாகி உள்ளது. மார்ச் 21 இல் இது தொடர்பாக காவல்துறையினர் காசியாபாத்தில் முகமது உசேன் என்பவரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி காவல் துறையினரும் மார்ச் 2021ல் முகமது இப்ராஹிம், அன்வர் ஆகிய இருவரையும் கைது செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Cover Image Courtesy: OpIndia