Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: குறைந்து வரும் கொரோனா தாக்கம், ஆனாலும் கவனம் முக்கியம் !

கேரளாவில் தற்போது குறைந்து வரும் கொரோனா தாக்கம் ஆனாலும் மக்கள் விழிப்புடன், கவனமுடன் இருக்க வேண்டும்.

கேரளா: குறைந்து வரும் கொரோனா தாக்கம், ஆனாலும் கவனம் முக்கியம் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Sep 2021 1:43 PM GMT

கேரளாவைப் பொறுத்தவரை தற்போது நூற்றுக்கும் தாக்கம் குறைந்து வருகின்றது. ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்க வில்லை எனில் மேலும் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 1,34,861 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 20,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த செப்டம்பர் மாதத்தில் 2ம் தேதிக்குப்பின் கடந்த 8ம் தேதி மீண்டும் தினசரி தொற்று 30 ஆயிரம் கடந்த நிலையில் கடந்த நான்கு தினங்களாக தினசரி தொற்று மீண்டும் 30 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது.


அதுவும் கடந்த நான்கு தினங்களாக தொற்று பதிவு படிப்படியாக குறைந்த வண்ணமே உள்ளது. பரிசோதனைகளை பொறுத்தளவில் நேற்றைவிட இன்று 19,286 பரிசோதனைகள் குறைந்துள்ளது. தொற்று எண்ணிக்கையும் 247 எண்ணிக்கையில் இன்று குறைந்துள்ளது. கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,75,431 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 22,551 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று வரை, 29,710 பேர் குணமடைந்துள்ளனர்.


கேரளாவில் தொற்று குறைந்திருந்தாலும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தற்காப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னை மக்கள் தொற்று நோயை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Input & image courtesy:Timesofindia



Next Story
கதிர் தொகுப்பு
Trending News