Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் எடுக்கும் மையமாக கேரளா மாறிவிட்டது: டி.ஜி.பி. பரபரப்பு தகவல்.!

கேரளா மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வருபவர் லோக்நாத் பெஹ்ரா. இவர் கடந்த 2016ம் ஆண்டு பினராய் விஜயன் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் நியமனம் செய்யப்பட்டார். இவர் இந்த மாதம் 30ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் எடுக்கும் மையமாக கேரளா மாறிவிட்டது: டி.ஜி.பி. பரபரப்பு தகவல்.!

ThangaveluBy : Thangavelu

  |  28 Jun 2021 7:24 AM GMT

ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட பல சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் எடுக்கும் மையமாக கேரளா மாறிவிட்டது என்று அம்மாநில போலீஸ் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

கேரளா மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வருபவர் லோக்நாத் பெஹ்ரா. இவர் கடந்த 2016ம் ஆண்டு பினராய் விஜயன் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் நியமனம் செய்யப்பட்டார். இவர் இந்த மாதம் 30ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், அவர் திருவனந்தபுரத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற மாநிலங்களில் கேரளா முன்னிலை பெற்று வருகிறது. ஆனாலும் சில இடங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை எனவும் கூறிவிட முடியாது.




கடந்த சில ஆண்டுகளாக கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் சில மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு சில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதற்கு எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை.

நான் எனது கடமையைத் செய்துள்ளேன். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சீருடை அணிந்து வருபவர்கள் நிரபாதிகள் அல்ல. மாவோயிஸ்டுகள் திருந்தி வாழ்வதற்கு பல்வேறு நேரங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட பல்வேறு சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு கேரளா ஒரு தேர்வு மையமாக மாறிவிட்டது. கேரளா மாநிலத்தில் டாக்டர்கள், இன்ஜினியர்கள் உட்பட படித்தவர்கள் அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணமும் ஆகும். அவர்கள் படித்தவர்களை மூளை சலவை செய்து தேவையான இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து கொள்கின்றனர்.

அதிகம் படித்தவர்கள் கூட தீவிரவாதிகளாக மாறுவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடன் மலையாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கேரளாவில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை என்றும் கூற முடியாது. இருந்தபோதிலும் போலீசார் பல தீவிரவாத செயல்பாடுகளை முறியடித்துள்ளனர். இருந்தபோதிலும் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. எந்த நிலையும் போலீஸ் சமாளிக்க உள்ளது. இன்னும் சில தினங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News