Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா : புகைப்படம் எடுக்க வந்த 27 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் !

Kerala gangrape case: One arrested, two absconding

கேரளா : புகைப்படம் எடுக்க வந்த 27 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் !
X

MuruganandhamBy : Muruganandham

  |  6 Dec 2021 3:35 PM IST

கேரளா, மலப்புரத்தில் இருந்து புகைப்படம் எடுப்பதற்காக கொச்சி வந்த 27 வயது ஃபேஷன் மாடலை கூட்டு பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலப்புழா, ஆராட்டுப்புழா பகுதியைச் சேர்ந்த சலீம் குமார், என்பவரால் பலாத்காரத்திற்கு ஆளான பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

காக்கநாடு அருகே எடச்சிராவில் உள்ள ஒரு லாட்ஜில் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். சலீம் குமார் என்பவரோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஷமீர் மற்றும் அஜ்மல் என்ற இரு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் சலீம் குமாரின் அழைப்பின் பேரில் அந்த பெண் ஹோட்டலுக்குச் சென்றபோது, பாலியல் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற இருவரும் நண்பர்கள் என போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு குளிர்பானங்களை அருந்தக்கொடுத்ததாக அப்பெண் போலிஸாரிடம் கூறினார்.

ஒரு அறைக்குள் அடைத்து, கற்பழிப்பு வீடியோக்களை எடுத்து, அவற்றை பரப்புவதாக மிரட்டினர். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மிரட்டி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடலிங் துறையில் ஈடுபட்டு வரும் அந்த பெண், டிசம்பர் 1ம் தேதி புகைப்படம் எடுப்பதற்காக காக்கநாடு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை புகார் அளிக்கப்பட்டதில் இருந்து ஷமீரும் அஜ்மலும் தலைமறைவாகிவிட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் அவரை பிடிக்க லாட்ஜ் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சலீம் குமார் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News