கேரளாவில் பெண்களுக்கு எதிராக தொடரும் வரதட்சணை கொடுமை.. ஆளுநர் உண்ணாவிரதம்.!
வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகதுகான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

By : Thangavelu
வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகதுகான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கேரளா மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமையால் பெண்கள் இறந்து வருகின்றனர். தற்போது அம்மாநிலத்தில் வரதட்சணை கொடுமை தலை தூக்கியுள்ளது. இந்த பிரச்சனை அம்மாநில பெண்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சையும் ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு பல்வேறு பிரபலங்கள் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக காந்திய அமைப்பு சார்பில் கேரளா மாநிலம் முழுவதும் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு பலரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது உண்ணாவிரத போராட்டத்தை காந்திய அமைப்பினருடன் சேர்ந்து ஆளுநர் மாளிகையில் தொடங்கியுள்ளார்.
ஆளுநர் மாளிகையிலேயே காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
