Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: ஐஸ்கிரீம் விற்று வந்த ஊரிலேயே எஸ்.ஐ.யாக வந்த இளம்பெண்.!

முதலில் 2 ஆண்டுகள் இல்லற வாழ்வில் கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த ஆனி. பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 8 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் பெற்றோர்களும் ஆனியை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. பின்னர் தனது பாட்டி வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

கேரளா: ஐஸ்கிரீம் விற்று வந்த ஊரிலேயே எஸ்.ஐ.யாக வந்த இளம்பெண்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  28 Jun 2021 5:27 PM IST

கேரள மாநிலம், திருவனந்தபுரம் காஞ்சிராம் குளத்தை சேர்ந்த எஸ்.பி.ஆனி சிவா 31, தனது கல்லூரி வாழ்க்கையின்போது, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

முதலில் 2 ஆண்டுகள் இல்லற வாழ்வில் கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த ஆனி. பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 8 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் பெற்றோர்களும் ஆனியை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. பின்னர் தனது பாட்டி வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

அங்கு தானும், குழந்தையும் வாழ்வதற்காக கிடைத்த அனைத்து வேலைகளையும் பார்த்துள்ளார். ஐஸ்கிரீம் விற்பது மற்றும் எலுமிச்சைப் பழம் உள்ளிட்டவைகளை விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். அதில் ஒரு புறம் தனது படிப்பையும் கைவிடாமல் வந்துள்ளார். ஒரு கட்டத்தில போலீஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஸ்கிரீம் விற்ற அதே ஊரில் எஸ்.ஐ.யாக ஆனி பணியில் சேர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் கேரளா மாநிலம் முழுவதும் முகநூல் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அனைத்து பெண்களுக்கும் ஆனி முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News