கேரளா to லண்டன் - சைக்கிளிலேயே 30,000 கிலோ மீட்டர் கடக்க துணிந்த இளைஞர்!
கேரளாவைச் சேர்ந்த IT இளைஞர் ஒருவர் கேரளாவில் இருந்து லண்டன் வரை சைக்கிளிலேயே 30,000 கி.மீ கடக்க துணிந்து உள்ளார்.
By : Bharathi Latha
பயணங்கள் மேற்கொள்வது என்பது ஒரு விதமான அலாதியான இன்பம் தான். அதுவும் தனியாக நாம் பயணங்கள் மேற்கொள்வது, எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் பல்வேறு உணர்வுகளை பல்வேறு அனுபவங்களையும் கடந்து செல்வது ஒரு திருப்பத்தை கொடுக்கும் அடுத்த கட்டமாக நாம் என்ன செய்யப் போகின்றோம்? என்பதையும் நமக்கு காண்பிக்கும். அந்த வகையில் தற்போது கடல் கடந்து, கண்டம் கடந்து சென்றால் எப்படி இருக்கும் ? என எண்ணிப் பார்த்து கேரளாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் இங்கு இருந்து லண்டன் வரை சைக்கிளிலேயே பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அலி என்ற 34 வயதான நபர் 450 நாட்களில் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சைக்கிளிலேயே கடந்து சாகச பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு அதை தற்போது தொடங்கியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்த சாகச பயணத்தை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பிய அந்த இளைஞருக்கு மத்திய கல்வி துறை அமைச்சர் சிவன் குட்டி அவர்கள் கொடியசைத்து வாழ்த்துக்களையும் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு செல்ல விசா கிடைக்காததால் முதலில் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு சைக்கிளில் சென்று அங்கிருந்து விமானம் வழியாக ஓமன் நாட்டிற்கு செல்ல இருக்கிறார். அதன்பிறகு மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா, துருக்கி, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்ய இருக்கிறார். இதுபோல பல நாடுகளை கடந்து இங்கிலாந்து அடைவதை இவருடைய பயணத்தின் இலக்கு என்று கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy:News