சந்தி சிரிக்கும் கேரளா மாடல் - கொரோனா கட்டுபாட்டில் தமிழகத்தை பார்த்தாவது கேரளா திருந்துமா?
சந்தி சிரிக்கும் கேரளா மாடல் - கொரோனா கட்டுபாட்டில் தமிழகத்தை பார்த்தாவது கேரளா திருந்துமா?

By : Mohan Raj
கேரளாவில் தற்பொழுது கொரோனா தாக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இன்று கம்யூனிஸ்ட்கள் கேரளா மாடல் என்று பெருமை பேசாமல் வாயடைத்து நிற்கின்றனர்.
கொரோனா தொற்று ஆரம்பகால துவக்கத்தில் இங்கு தமிழகத்தில் தொற்றின் வீரியம் அதிகமாகி இருந்தன. அதே சமயத்தில் கொரோனா தொற்று கேரளாவில் குறைந்த அளவில் இருந்ததால் "பார்த்தீர்களா கேரளாவை? இந்தியாவின் சிறந்த மாநிலம், இவரல்லவோ சிறந்த முதல்வர், இதுவல்லவோ சிறந்த மாநிலம் என இங்குள்ள காம்ரேட்'களே மார்தட்டி வந்தனர். போதாக்குறைக்கு கேரளாவை பார்த்து தமிழகம் திருந்த வேண்டும் என்று வாய்ச்சவடால் வேறு.
அப்போது தமிழகம் கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் 3, அடுத்து 2 வது இடத்தில் இருந்தது. அப்போது பலரும் பலவகையான விமர்சனங்களை ஏவி வந்தனர். ஆனால் நிலமையோ தற்பொழுது தலைகீழ் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 537 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 08 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 78 ஆயிரத்து 694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 119 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,796 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என பல வல்லுனர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசோ கையை பிசைந்துகொண்டு நிற்கிறது.
இந்திய அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரமோ கேரளாவுடன் ஒப்பிடும்போது தலைகீழ், வீணாக குறைசொல்லப்பட்டு வந்த தமிழகம் 10'ம் இடத்தில் உள்ளது.
இவையெல்லாம் தமிழக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையால் மற்றும் மத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதலை தமிழக அரசு தட்டாமல் நிறைவேற்றியதால் நிகழ்ந்த சாதனை. அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த, அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும் இப்போது தமிழக அரசை பாராட்டி வருகின்றனர்.
இப்பொழுதாவது தமிழகத்தை பார்த்து கேரளா திருந்துமா? எங்கே வாய்ச்சவடால் விடும் காம்ரேட்'கள்?
