Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: மோப்லா இந்துக்கள் படுகொலையின் தலைவனை பகத்சிங்குடன் ஒப்பிட்ட சபா நாயகர்- சர்ச்சை !

கேரளாவில் 10,000 ஹிந்துக்களின் மரணத்திற்கு மோப்லா படுகொலை வழிவகுத்தது.

கேரளா: மோப்லா இந்துக்கள் படுகொலையின் தலைவனை பகத்சிங்குடன் ஒப்பிட்ட சபா நாயகர்- சர்ச்சை !
X

Saffron MomBy : Saffron Mom

  |  24 Aug 2021 1:42 PM GMT

கேரள சட்டசபையின் சபாநாயகர், ராஜேஷ், இந்துக்களை கொன்று குவித்த மோப்லா படுகொலையின் தலைவன் குன்னத்து குஞ்சஹம்மது ஹாஜியை, பகத்சிங்குடன் ஒப்பிட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோப்லா படுகொலையின் 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாநில நூலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

"அவரது (வரியன் குன்னத் குஞ்சஹம்மத் ஹாஜி) இடம் பகத் சிங்குக்கு இணையாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்," என்று மலப்புரத்தில் உள்ள திருரங்கடியில் நடந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து ராஜேஷ் கூறினார். இந்தக் கூற்றுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

கேரளாவில் பா.ஜ.க பொதுச் செயலாளர் சி கிருஷ்ணகுமார், கேரள சட்டசபை சபாநாயகரை தேசத்துரோக சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். அவர் கூறுகையில், "ராஜேஷ் சுதந்திர போராட்டத்தை அவமதித்துள்ளார், மலபாரில் இந்துக்களை படுகொலை செய்த ஆக்கிரமிப்பாளர் வரியம் குன்னனுடன் பகத்சிங்கை ஒப்பிட்டுள்ளார். முஸ்லீம் அடிப்படைவாதிகளை மகிழ்விப்பதற்காக, ஒரு கிளர்ச்சியாளரை சுதந்திரப் போராட்ட வீரராக்குவதற்கான சபாநாயகரின் அறிக்கையை CPM ஏற்றுக்கொள்கிறதா என்பதை அதன் செயலாளர் ஏ விஜயராகவன் தெளிவுபடுத்த வேண்டும். 'மலபார் கலவரம்' கேரளாவில் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல். 1921 -ல், வரியம்குன்னனும் அவரது கும்பலும் தற்போதைய தலிபான்களைப் போலவே பல கொடுமைகளைச் செய்தனர்" என்று கூறினார்.

தஜீந்தர் பால் சிங் பாகாவுடன் இணைந்து ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்வேன் என்று பா.ஜ.கவைச் சேர்ந்த அனூப் கைப்பாலி கூறினார்.



கேரளாவில் 10,000 ஹிந்துக்களின் மரணத்திற்கு மோப்லா படுகொலை வழிவகுத்தது. இந்த படுகொலையை அடுத்து சுமார் 100,000 இந்துக்கள் கேரளாவை விட்டு வெளியேற நேர்ந்தது என்று நம்பப்படுகிறது. இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட இந்து கோவில்களின் எண்ணிக்கை நூறு என்று ஊகிக்கப்படுகிறது. வலுக்கட்டாயமாக இந்துக்களை மதம் மாற்றுவது பரவலாக இருந்தது மற்றும் சொல்ல முடியாத கொடுமைகள் இந்துக்கள் மீது நடத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, படுகொலையின் 100 வது ஆண்டு நிறைவையொட்டி மக்கள் #MalabarIslamicState என சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் செய்தனர்.


Cover Image Courtesy: Sunday Guardian


Next Story
கதிர் தொகுப்பு
Trending News