சம்ஸ்கிருத வேதங்கள், ஸ்லோகங்கள் படிக்கும் கேரள இஸ்லாமிய மாணவர்கள் - திரும்பி பார்க்க வைக்கும் கேரள இஸ்லாமிய பாடசாலை
கேரளா இஸ்லாமிய மாணவர்கள் சமஸ்கிருதம் மற்றும் வேதம் படிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
By : Mohan Raj
கேரளா இஸ்லாமிய மாணவர்கள் சமஸ்கிருதம் மற்றும் வேதம் படிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
கேரளாவின் திருச்சூரில் உள்ள ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதங்கள், வேதங்கள், மந்திரங்கள், ஸ்லோகங்கள் கற்பது பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.
இந்திய திணிப்பதாக கல்வி அரசியல் போர் தமிழகத்தை போல் கேரளாவிலும் நடக்கிறது. இந்த நிலையில் திருச்சூரில் உள்ள 'அகாடமி ஆப் சரியா' மற்றும் 'அட்வான்ஸ் ஸ்டடீஸ்' என்ற கல்வி நிறுவனத்தில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கு சமஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
இது குறித்து கல்வி மையத்தின் முதல்வர் ஓனம்பிலி முகம்மது கூறியது, 'நான் சங்கரர் கோட்பாடுகள் குறித்து படித்துள்ளேன். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இஸ்லாம் மதத்தை தவிர மற்ற மதத்தில் உள்ளவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் அவர்கள் விரும்பினால் அதன்படி சமஸ்கிருதம், மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன.
மேலும் சமஸ்கிருதம் கற்றுத்தரும் பேராசிரியர்கள் கூறியதாவது, 'நெற்றியில் விபூதி, சந்தனத்துடன் நாங்கள் இந்த கல்வி மையத்தில் நுழைந்தபோது பலரும் இங்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டனர். இஸ்லாமிய மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுத் தருவதாக கூறிய போது அவர்கள் ஆச்சரியப்பட்டதுடன் இந்த முயற்சிக்கு வரவேற்பளித்தனர். மொழிக்கு மதம் கிடையாது நிச்சயம் கற்றுத் தருகிறோம் என கூறினோம். முதலில் கடினமாக இருந்தாலும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சமஸ்கிருதம் படிப்பது அனைவரும் பாராட்டையும் பெற்றுள்ளது என்றார்.