கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! இதுவரை இல்லாத உச்சம் !
கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் உச்சத்தை அடைந்துள்ளது.
By : Bharathi Latha
இந்தியாவில் தற்போது வரை கேரளா மாநிலத்தில் தான் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரமாக இருந்துவந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே அங்கிருக்கும் மக்கள் அந்த வகையில் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் மட்டும் அல்லாமல் நிபா வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்காக மத்திய அரசாங்கத்தின் சார்பில் குழுவும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் இன்று மட்டும் சுமார் 17,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 44,24,046 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987 ஆக உயர்ந்துள்ளது. இன்று 208 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,987 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தற்பொழுது வரை 1,90,790 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தொடர்ச்சியான வண்ணம் இங்கு பாதிப்புகளில் எண்ணிக்கை அதிகரித்தும் குறைந்தும் வருவது வழக்கமாக உள்ளது இதன் காரணமாக தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் தற்போது தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Input & image courtesy: Business-standard