Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா இறப்புகளை குறைத்து காட்டுகிறதா கேரளா ? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு !

கொரோனா இழப்புகளை குறைத்து காட்டி வருவதாக கேரள அரசாங்கம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

கொரோனா இறப்புகளை குறைத்து காட்டுகிறதா கேரளா ? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Oct 2021 5:42 PM GMT

பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான கேரள அரசு, நூற்றில் இழப்புகளின் எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை கிளப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது, கேரளாவின் பொது சுகாதார நிபுணர் குழுவை தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளையும் அது நிராகரித்துள்ளது. இந்தியா முழுவதும் குறைந்து வரும் நோய் தொற்றிக் இடையில் கேரளாவில் மட்டும்தான் நோய் தொற்று அதிக அளவில் இருந்தது எனவே அங்கு இழப்புகள் அதிக அளவில் தான் இருந்தது. உதாரணமாக, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 585 COVID-19 இறப்புகளில், 482 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கேரளா அதன் எண்ணிக்கையில் முன்னர் அறிவிக்கப்படாத இறப்புகளைச் சேர்க்கத் தொடங்கிய பின்னர் சமீபத்திய நாட்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட COVID-19 இறப்புகளின் எண்ணிக்கையில் இந்தியா அதிகரிப்பைக் கண்டுள்ளது. அந்த வகையில் 482 இறப்புகளில் 90 இழப்புகள் மட்டுமே கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளன. பல இழப்புகளில் எண்ணிக்கையை சுகாதாரத்துறை புதுப்பிக்கப் இல்லை என்பதையும் இது காட்டுகிறது. இத்தகைய பிரச்சினைகளுக்குப் பிறகு, மேலும் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் மேல்முறையீடுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி, கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதுவரை கேரளாவில் இழப்புகளின் எண்ணிக்கையில் 7,000 காணவில்லை.


மேலும் அக்டோபர் 8 ஆம் தேதி, கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் மாநில சட்டசபையில், மாநில அரசு மேலும் 7,000 இறப்புகளைச் சேர்க்கும் என்று அறிவித்தார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவமனைகள் இறப்புகள் குறித்த புள்ளி விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றத் தொடங்குவதற்கு முன்பே கணக்கில் வராத இறப்புகள் நிகழ்ந்தன என்று அரசாங்கம் கூறியது. எனவே, மார்ச் 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் மொத்தம் சேர்க்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையுடன் தினசரி பதிவாகும் புதிய இறப்புகள் குறித்த பிரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை இப்போது வெளியிடுகிறது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

Input & Image courtesy:Moneycontrol


Next Story
கதிர் தொகுப்பு
Trending News