Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவில் இன்று இரண்டு ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.!

கேரளாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனா தொற்று இன்று வரை குறையாமல் அதே வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அந்த வகையில் இன்று அம்மாநிலத்தில் 1,984- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கேரளாவில் இன்று இரண்டு ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 March 2021 7:44 PM IST

கேரளாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனா தொற்று இன்று வரை குறையாமல் அதே வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அந்த வகையில் இன்று அம்மாநிலத்தில் 1,984 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சில மாநிலங்கள் முறையாக பின்பற்றாத காரணத்தினால் தொற்று குறையாமல் உள்ளது. அதில் கேரளா மாநிலமும் ஒன்றாகும்.




இதனிடையே அம்மாநிலத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 158- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 73 ஆயிரத்து 343 ஆக உள்ளது.




அதே போன்று இன்று 17 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். முழுமையாக தொற்றில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News