Kathir News
Begin typing your search above and press return to search.

வங்கிக்கணக்கு இல்லாமல் கையில் டிஜிட்டல் பணம் - பிரதமரின் கனவுத்திட்டம் சாத்தியமானது எப்படி ? மறைந்திருக்கும் சிறப்பம்சங்கள் !

e-RUPI is basically a digital voucher which a beneficiary gets on his phone in the form of an SMS or QR code. It is a pre-paid voucher, which he/she can go and redeem it at any centre that accepts its.

வங்கிக்கணக்கு இல்லாமல் கையில் டிஜிட்டல் பணம் - பிரதமரின் கனவுத்திட்டம் சாத்தியமானது எப்படி ? மறைந்திருக்கும் சிறப்பம்சங்கள் !

Image Source : PIB

PM Modi to launch digital payment solution e-RUPI

MuruganandhamBy : Muruganandham

  |  8 Aug 2021 3:57 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2-ம் தேதி ரொக்கமில்லா, நேரடி தொடர்பில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான, டிஜிட்டல் பரிவர்த்தனைத் தீர்வான இ-ருபி-யைத் தொடங்கி வைத்தார்.

இ-ருபி என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும். அதனை பயனாளி அவரது தொலைபேசியில் குறுந்தகவல் வடிவிலோ அல்லது கியூஆர் கோட் வடிவிலோ பெறுவார். இது முன்கூட்டியே பணம் செலுத்திய வவுச்சர் ஆகும். அதனை ஏற்றுக்கொள்ளும் எந்த மையத்திலும் அதைக்காட்டி பயனாளி பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, ஒரு ஊழியருக்கு குறிப்பிட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று அரசு விரும்பினால், அது இ-ருபி வவுச்சரை ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குதார வங்கி மூலமாக வழங்கலாம். ஊழியருக்கு ஒரு குறுந்தகவலோ அல்லது அவரது போனில் கியூஆர் கோடோ அனுப்பப்படும். அந்த ஊழியர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று போனில் பெறப்பட்ட இ-ருபி வவுச்சர் மூலமாக பணம் செலுத்தி சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு இ-ருபி ஒரே தடவையிலான, நேரடி தொடர்பில்லாத, ரொக்கமில்லா வவுச்சர் அடிப்படையிலான பரிவர்த்தனை முறையாகத் திகழ்கிறது. இது எந்தவித அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை செயலி அல்லது இணையதள வங்கி அணுக்கம் ஆகியவற்றின் உதவியுமின்றி பயனாளிகள் பணம் பெறுவதற்கு உதவுகிறது.

மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடுகையில், இ-ருபியைப் பொறுத்தவரை பயனாளிக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது மிகப் பெரிய சிறப்பு அம்சமாகும். இது எளிமையான, நேரடி தொடர்பில்லாத பணம் பெறுவதை உறுதி செய்கிறது. இதற்கு தனிநபர் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இதில் மற்றொரு பயனும் உள்ளது. சாதாரண போன்கள் மூலம் கூட இ-ருபி முறையைப் பயன்படுத்தலாம். அதனால், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும், இணையதள வசதி இல்லாத இடங்களில் உள்ளவர்களும் கூட இதனைப் பயன்படுத்தலாம். தொடக்கமாக என்பிசிஐ 1,600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை தொடர்பில் வைத்துள்ளது. இங்கு இ-ருபி முறையைப் பயன்படுத்தலாம்.

வரும் நாட்களில், தனியார் துறை ஊழியர்களுக்கு பயன்களை வழங்குவதற்கும், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொழில் பரிவர்த்தனைகளுக்கு பின்பற்றவும் ஏதுவாக இ-ருபி பயன்படுத்தப்படும், தளம் விரிவாக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News