மாட்டிறைச்சிக்கு ‘கோமாதா உலர்த்’.. மீண்டும் இந்துக்களை சீண்டிய ரெஹானா.. ஜாமீனில் வந்தும் திருந்தவில்லை.!
மாட்டிறைச்சிக்கு ‘கோமாதா உலர்த்’.. மீண்டும் இந்துக்களை சீண்டிய ரெஹானா.. ஜாமீனில் வந்தும் திருந்தவில்லை.!

மாட்டிறைச்சியை ‘கோமாதா’ என்று வேண்டும் என்றே பெயர் சூட்டிய ரெஹனா. இவரது பேச்சுக்கு கேரளாவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இவர் ஏற்கனவே பல சர்சைகளில் சிக்கி நீதிமன்றம் கண்டனங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஏதாவது வாயிக்கு வந்ததை பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ரெஹானா. சர்ச்சையில் சிக்க வேண்டும் என்றே பிறந்தவர் போன்று தன்னை காட்டிக்கொள்வார்.
இதற்கு முன்னர் சபரிமலை செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தபோது, அங்கு மலைஏற சென்றவர்தான் இந்த போலி சமூக செயற்பாட்டாளர் பாத்திமா ரெஹானா. இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடலை பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில் பாத்திமா அரை நிர்வாணத்தில் இருக்க, தன்னுடைய குழந்தைகளை விட்டு, அவர் உடலில் ஓவியம் வரைய சொன்னார். இதற்கு கேரள மக்கள் மட்டுமின்றி உச்சநீதிமன்றம் வரை சென்று அதிருப்தியை சம்பாதித்து கொண்டார். இது போன்ற வழக்குலாம் எங்களுக்கு வரணுமா என்று நீதிபதியே நொந்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில், மறுபடியும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ரெஹனா கலந்து கொண்டார். அப்போது மாட்டிறைச்சி சமைத்துக் கொண்டிருந்தார். தான் சமைத்த மாட்டிறைச்சி உணவிற்கு ‘‘கோமாதா உலர்த்’’ என்று பெயர் சொன்னார். மாட்டிறைச்சியை கோமாதா என்று கூறியதுதான் பல தரப்பையும் அதிர வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
வேண்டும் என்றே இந்து சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோமாதா என்ற இறைச்சியை சமைப்பதாக கூறியுள்ளதாக பலரும் தங்களின் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
பசுவை புனிதமாக கருதும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 153ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை கேரள நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, கோமாதா என்ற சொல் புனிதமான பசுவை குறிக்கும் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், மனுதாரர் மேற்கோள் காட்டிய வேதங்களில் பழங்காலத்தில் இருந்தே பசுக்களை தெய்வமாக மக்கள் மதித்து வழிபட்டு வந்துள்ளனர். இதை லட்சக்கணக்கான இந்துக்கள் நம்புவது அனைவரும் அறிந்ததே.
ஜாமீன் நிபந்தனைகளை ரெஹனா மீறியுள்ளார். சபரிமலை வழக்கு முடிவுக்கு வரும் வரை, இது போன்று சர்ச்சைக்குரிய கருத்துகளை ரெஹனா தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இவருக்கு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.