Kathir News
Begin typing your search above and press return to search.

லஷ்மி விலாஸ் வங்கி  திவால் ஆகவில்லை.. தேவையற்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!

லஷ்மி விலாஸ் வங்கி  திவால் ஆகவில்லை.. தேவையற்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!

லஷ்மி விலாஸ் வங்கி  திவால் ஆகவில்லை.. தேவையற்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  18 Nov 2020 1:30 PM IST

லட்சுமி விலாஸ் வங்கியில் ஒரு மாதத்துக்கு 25,000 ரூபாய்க்கு மேல் எடுக்கக்கூடாது என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இது குறித்து சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி, நாட்டின் பல்வேறு இடங்களில் 566 வங்கிக் கிளைகளையும், 918 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமி விலாஸ் வங்கி வாராக்கடன் பிரச்சினையில் சிக்கித்தவிக்கிறது. லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது.

இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய ரிசர்வ் வங்கி. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது.

பிரச்சனையில் இருந்த லஷ்மி விலாஸ் வங்கி திவால் ஆகவில்லை / இழுத்து மூடப்படவில்லை. இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு Moratorium எனப்படும் பணமெடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை ஒரு சில மாதங்கள் நீடிக்கும்.இது குறித்து தவறான தகவல்கள் எதையும் பகிர வேண்டாம். லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் விரும்பினாலும் 25000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது. தேவையற்ற வதந்திகளை நம்பி மொத்த பணத்தையும் எடுக்க ஓடவேண்டாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News