Kathir News
Begin typing your search above and press return to search.

நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டப் போகும் மத்திய அரசு: உயிர்த்தியாகத்தைச் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி!

பெயரிடப்படாத மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயர்கள் சூட்டப்படும்.

நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டப் போகும் மத்திய அரசு: உயிர்த்தியாகத்தைச் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Jan 2023 12:40 AM GMT

ஜனவரி 23-ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார். பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை தீவுகளுக்கு பெயரிடுவது அவர்களுக்கு என்றென்றும் அஞ்சலி செலுத்துவதாக அமையும்.


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைக்கிறார். ஜனவரி 23-ம் தேதி பராக்ரம் திவாஸ்-பராக்கிரம தினத்தில், காலை 11 மணிக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.


நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவை போற்றும் வகையில், 2018 ஆம் ஆண்டு தீவுக்கு பிரதமர் சென்ற செய்த போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என மறுபெயரிடப்பட்டது. நிஜ வாழ்க்கை பராக்கிரமசாலிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் செயல்படுவார். இந்த உணர்வின் வெளிப்பாடாக, அங்குள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News