Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுமக்களுக்கு தொந்தரவாக சாலையில் நிறுத்தும் வாகனங்கள் - நிதின் கட்கரியின் புதிய யோசனை

பொதுமக்களுக்கு தொந்தரவாக சாலையில் நிறுத்தும் வாகனங்கள் - நிதின் கட்கரியின் புதிய யோசனை
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jun 2022 10:44 AM GMT

உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இத்தனை கோடி மக்கள் வசிப்பதற்கு இருப்பிடங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நகரமயமாகி வருவதால் ஒரே இடத்தில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்து வருவதால் குடியிருப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறைந்த இடங்களில் நிறைய பேர் வாழ வேண்டும் என்றால் இருக்கும் இடங்களில் எல்லா கட்டிடங்களும் கட்டப்பட்டு விட்டது. சாலையின் எல்லை வரையில் கூட வீடு உள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனப் பயன்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. குறைந்தது ஒரு வீட்டில் ஒரு வண்டி என்கின்ற நிலை மாறி ஒரு ஆளுக்கு ஒரு வண்டி, கார் என்ற நிலை மாறிவிட்டது. பெரும்பாலான வீடுகளில் வண்டி நிறுத்துவதற்கு இடம் இருப்பதில்லை, இதனால் அவர்கள் தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் சாரை, சாரையாக நிறைந்துள்ளது. இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடம் இருப்பதில்லை. இதனால் சாலையில் வாகன நெரிசலும் ஏற்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: தற்போது ஏற்பட்டிருக்கும் சாலை போக்குவரத்துப் பிரச்சனைக்கு ஒரு சட்டம் கொண்டு வரப்படும் என்றார். அந்த சட்டத்தில், சாலையை யாராவது மறித்து வாகனங்கள் நிறுத்தியிருந்தால் அதனை போட்டோ எடுத்து பொதுமக்கள் அனுப்பினால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் வழங்கப்படும். படம் எடுத்து அனுப்பும் நபர்களுக்கு ரூ.5,00 ரூபாய் கொடுக்கப்படும். இத்திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இது போன்ற சட்டம் கொண்டுவரப்படும்போது வாகனங்கள் சாலையில் நிறுத்துவதை தடுக்க முடியும். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News