பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த அமெரிக்காவின் விருதான லிஜியன் ஆஃப் மெரிட் விருது!
பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த அமெரிக்காவின் விருதான லிஜியன் ஆஃப் மெரிட் விருது!
By : Rama Subbaiah
அமெரிக்க நாட்டின் லிஜியன் ஆப் மெரிட் என்ற உயரிய விருது , அமெரிக்க அதிபரால் மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரதமர் மோடியின் சார்பில் , அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து , இந்த விருதினை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
அமெரிக்க இந்திய நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்தியது, உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக அமெரிக்காவின் உயரிய விருதான லிஜியன் ஆஃப் மெரிட் விருதை பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கும் இந்த விருது முன்னர் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக அந்நாட்டு பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டதாகவும், ஓ பிரையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த செயல்பட்டது மற்றும் உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது இதன் மூலம் பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உலக அமைதியை மேம்படுத்தும் திறனை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது” என இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.