Kathir News
Begin typing your search above and press return to search.

'சங்கிகளை ஒழிக்க லஷ்கர்-இ-தொய்பாவை அழைப்போம்' - மங்களூரில் அட்டூழியம்.!

'சங்கிகளை ஒழிக்க லஷ்கர்-இ-தொய்பாவை அழைப்போம்' - மங்களூரில் அட்டூழியம்.!

சங்கிகளை ஒழிக்க லஷ்கர்-இ-தொய்பாவை அழைப்போம் - மங்களூரில் அட்டூழியம்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  28 Nov 2020 12:20 PM IST

கர்நாடகாவின் மங்களூரில் ஒரு சுவற்றில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. "சங்கிகளையும், மனுவாதிகளையும் ஒழிக்க லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தலிபான்களை வரவேற்க எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்" என்பது தான் அவ்வாசகங்கள்.

இந்த வாசகங்களுக்குக் கீழே "லக்ஷர் வாழ்க" என்ற பொருள் படி லக்ஷர் ஜிந்தாபாத்" என்ற ஹாஷ்டேக் வரையப்பட்டுள்ளது.

2008ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர். அத்தீவிரவாத தாக்குதல்கள் நடந்து பன்னிரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று வரையப்பட்ட இவ்வாசகங்கள் சமூக ஊடகங்களில் மட்டுமன்றி, பொதுமக்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 27ஆம் தேதி அதிகாலை என்று இவை கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர். மங்களூர் சர்கியூட் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில் இவை வரையப்பட்டிருக்கின்றன.

அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அவ்வாசகங்கள் தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கின்றது.

போலீசார் கூறுகையில், "நாங்கள் இப்போது அதை மூடி விட்டோம். வட்டாரத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் சரி பார்க்கப்படுகின்றன. சாத்தியமான அனைத்து தடயங்களையும் நாங்கள் தேடுகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

பெயர் தெரியாத சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது, பிரிவு 153 மற்றும் பொது சொத்துக்களை அழிப்பது தொடர்பான பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வாசகத்தில் 'மனுவாதி' என்ற என்ற வார்த்தை இருந்தது. பல இந்து விரோத சக்திகள் தங்கள் விருப்பத்திற்கு அடிபணியாத அனைத்து இந்துக்களையும் 'மனுவாதிகள்' என்று அழைக்கும் மூலம் 'இந்துத்துவாவை' எதிர்த்துப் போராடுவதாக கூறுகின்றனர். 'சங்கிகள்' என்ற வார்த்தையை இடதுசாரி மற்றும் இஸ்லாமியவாதிகள் தங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் ஹிந்துக்களைக் குறிக்க பொதுப்படையாக கூறுகின்றனர்.

தங்கள் கருத்துக்களுக்கு சற்று வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருந்தாலோ அல்லது இஸ்லாமிய வாதிகளை முழுவதுமாக ஆதரிக்காவிட்டால் அவர்களுக்கு சங்கிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்கள்தான் சங்கிகள் என்பது மாறி தற்பொழுது அனைத்து ஹிந்துக்களுக்கும் முத்திரை குத்தப்பட்டு வருகிறது. இது இந்துக்களை ஒற்றுமைப் படுத்தி தங்கள் மீதான வெறுப்பினை அவர்களை உணரச் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இச்சம்பவம் காஷ்மீரில் கூட நடைபெறாமல் கர்நாடகாவில் நடைபெறுவது பலரையும் ஆச்சரியத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.

ஸ்லீப்பர் செல்கள் போல் நம்மைச் சுற்றி எத்தனை தீவிரவாதிகள் நடமாடுகின்றனர் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் பொதுச்சொத்தை சேதப்படுத்துவது போன்ற பிரிவுகளின்கீழ் மட்டுமல்லாமல், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது, பெரும்பான்மை மக்களை மிரட்டுவது, தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு போன்ற கடும் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News