Kathir News
Begin typing your search above and press return to search.

மசூதிகளின் ஒலிபெருக்கிகள் பள்ளிகள், மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன - யோகியின் அதிரடி

'மசூதிகளின் ஒலிபெருக்கிகள் பள்ளிகள், மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றன' என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மசூதிகளின் ஒலிபெருக்கிகள் பள்ளிகள், மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன - யோகியின் அதிரடி

Mohan RajBy : Mohan Raj

  |  23 May 2022 2:42 PM GMT

'மசூதிகளின் ஒலிபெருக்கிகள் பள்ளிகள், மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றன' என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, 'பல மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் கலவரங்கள் நடந்தன, ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சமீபத்திய சட்டமன்ற தேர்தலின் போதும் அதற்கு பின்னரும் எந்த கலவரம் நடைபெறவில்லை உத்தரபிரதேச தேர்தலின் போதும் அதற்குப் பின்னும் கலவரம் எதுவும் நடக்கவில்லை' என்றார்.

மேலும் பேசிய அவர், 'இப்பொழுது உத்தரப்பிரதேசத்தில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது, அல்லது ஒலிபெருக்கி முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது அவ்வாறு அகற்றப்படும் ஒலிபெருக்கிகள் பொது அமைப்புகளுக்கும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன'


அதேபோல், மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் அனைத்து சட்ட விரோத இறைச்சிக் கூடங்களை மூடினோம். பின்னர் தெருக்களிலும், பொது இடங்களிலும் சுற்றித் திரியும் கால்நடைகள் சட்டவிரோத இறைச்சி கூடங்களில் கடத்தப்பட்டன இந்த சவாலை எதிர்கொள்ள 1600 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதுகாப்பு மடம் அமைத்துள்ளோம். பசுவின் சாணத்திலிருந்து சி.என்.ஜி தயாரிக்கும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அதற்காக மக்களிடம் இருந்து பசுவின் சாணத்தை கிலோ ஒன்றுக்கு 1 ரூபாய் கொடுத்து வாங்கப்படும்' எனவும் அறிவித்துள்ளார்.

பசுக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பா.ஜ.க ஆட்சியில் தான் அயோத்திக்கு பிரம்மாண்ட ராமர் கோவிலும், வாரணாசிக்கு காசி விஸ்வநாதர் கோயிலும் கட்டப்பட்டுள்ளன' என்றார்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News