சினிமா பிரபலங்கள் மருத்துவமனைகளை ஆக்கிரமித்துள்ளனர்.. புலம்பும் மகாராஷ்டிரா அமைச்சர்.!
லேசான அறிகுறி தென்பட்டாலே போதும் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மும்பையில் உள்ள மருத்துவமனைகளை ஆக்கிரமித்து விடுகின்றனர் என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அஸ்லம் ஷேக் தெரிவித்துள்ளார்.

By : Thangavelu
லேசான அறிகுறி தென்பட்டாலே போதும் சினிமா பிரபலங்கள் உடனடியாக மருத்துவமனைகளை ஆக்கிரமித்துவிடுகின்றனர் என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் புலம்பி வருகின்றார். இந்தியாவில் கடந்த ஒரு மாதம் காலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு போலவே மருத்துவமனைகளும் நிரம்பி வருகிறது.
இதற்காக தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகளில் கொரோனா சிறப்பு வார்டுகளை தயார் செய்யும் பணிகளில் மத்திய, மாநில சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், லேசான அறிகுறி தென்பட்டாலே போதும் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மும்பையில் உள்ள மருத்துவமனைகளை ஆக்கிரமித்து விடுகின்றனர் என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அஸ்லம் ஷேக் தெரிவித்துள்ளார். ஒன்னுமே இல்லை என்றாலும் தனியார் மருத்துவமனைகளை பிரபலங்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர். மிக நீண்டகாலமாக மருத்துவமனைகளிலேயே தங்கி விடுகின்றனர்.
இதனால் மிகவும் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மும்பையில் கொரோனா 2வது அலை தொடங்கியதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பிரபலங்கள் சாதாரண அறிகுறிகளுக்கு மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
