போதைப் பொருட்கள் கடத்தலில் மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு தொடர்பு? பீதியில் சரத்பவார்!
சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரங்கள்தான் வடநாட்டு ஊடகங்களில் முன்னணி செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
By : Thangavelu
சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரங்கள்தான் வடநாட்டு ஊடகங்களில் முன்னணி செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வரும் சிவசேனா இதுவரைக்கும் வாய் திறக்காமல் அமைதி காத்து வருகிறது. ஆனால் அவரது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சரத்பாவரின் தேசியவாத காங்கிரசும் பயத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஆர்யான்கான் கைது விவகாரத்தில் பெரும் கலக்கம் அடைந்துள்ளது. அதிலும் சரத் பவார் மிகவும் பீதி அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது.
இதற்கு மிக முக்கியமாக தனது கட்சிக்கு பெரும் பிரச்சனை வரும் எனவும் அவர் நினைத்து வருகிறார். சரத் பாவருக்கு நெருக்கமான தலைவர் நவாப் மாலிக். தற்போது மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக உள்ளார். சமீபத்தில் போதை பொருட்கள் கடத்தல் சம்மந்தமாக நவாப் மாலிக்கின் மருகன் கைது செய்யப்பட்டார். இந்த பின்னணியில் ஆர்யான் கைதுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உலகளவில் அச்சுறுத்தலாக விளங்கும் போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோணத்திலும் போதை தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைக்கும்பல் குறித்து விசாரணை வேகமாக நடத்தப்பட்டு வருவதால், தனது கட்சியின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மாட்டலாம் என்று மிகவும் பீதியடைந்துள்ளாராம் சரத்பவார்.
மேலும், போதை பொருட்கள் தொடர்பாக சரத்பவார் கட்சியின் அமைச்சர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை ஒரு பக்கம் நடைபெற்றதால் மிகப்பெரிய சிக்கலில் சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வருகிறது.இன்னும் சில தினங்களில் மகாராஷ்டிரா அரசில் மிகப்பெரிய மாற்றங்களும் நிகழவும் வாய்ப்பு இருக்கிறது. போதை பொருட்களை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar